கீழ்பென்னாத்தூரில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 40 பவுன் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு பறிமுதல் செய்தனர்.
தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்றிருந்த நபர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், 318 கிராம் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பறக்கும் படையி னர் கூறும்போது, “கீழ்பென்னாத் தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த இளைஞர் வைத்திருந்த பையை சோதனையிட்டோம். அதில், 318.741 கிராம் புதிய தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. அதற்கான ஆவணங்கள், அந்த நபரிடம் இல்லை. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை முருகர் கோயில் தெருவில் வசிக்கும் கார்த்திகேயன்(25) என்பது தெரியவந்தது. மேலும் அவர், அவலூர்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். சென்னையில் இருந்து புதிய நகைகளை வாங்கிக் கொண்டு, அவலூர்பேட்டை செல்வதற்காக பேருந்து மூலம் கீழ்பென்னாத்தூர் வந்துள்ளார். பின்னர் இங்கிருந்து அவலூர்பேட்டை செல்ல பேருந்துக்காக காத்திருந்தபோது பிடிபட்டார். அவர் வைத்திருந்த நகைகளுக்கு ஆவணங்கள் இல்லாததால், அதனை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago