திருவண்ணாமலையில் - முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் :

By செய்திப்பிரிவு

தி.மலை நகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்றவர்களிடம் இருந்து நேற்று ரூ.27,200 அபராதம் வசூலிக்கப் பட்டது.

தி.மலை மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை என்பதுகடந்த 2 மாதங்களாக மெத்தனமாக நடைபெற்றது. இந்நிலையில்,கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன் எதிரொலியாக, தி.மலை நகராட்சியில் நேற்று திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் நகராட்சி அலுவலக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் சிலர் இருப்பதுதெரியவந்தது. மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களும் முகக்கவசம் அணிய வில்லை. இதையடுத்து, விதிகளைபின்பற்றாததால் ரூ.27,200 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட் டுள்ளது. மேலும் அரசுப் பேருந்துகளில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்றவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்