பொது காப்பீட்டுத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

பொது காப்பீட்டுத் துறை நிறுவனங்களில் ஒன்றை தனியார்மயமாக்கும் முடிவைக் கண்டித்தும், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை உயர்த்த எதிர்ப்புத் தெரிவித்தும், 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பொதுக் காப்பீட்டுத் துறை ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் வளர்ச்சி அதிகாரிகள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால், அனைத்து அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் மூடிக் கிடந்தன. வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நாடிமுத்து தலைமை வகித்தார். ஏஐஇஇஏ மாவட்டச் செயலாளர் டி.பிரபு ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதிகாரிகள் ஜெய, தியாகராஜன், தஞ்சாவூர் கோட்ட எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்