தபால் வாக்கு அளிப்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சி :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சட்டப்பேரவைத்தேர்தலில் காவல் பணியில் ஈடுபடவுள்ள 865 காவலர்களுக்கு தபால் வாக்களிப்பது குறித்த பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் காவல் பணியில் ஈடுபட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் ஆயுதப்படையினர் என 733 பேர் ஈடுபட உள்ளனர். அதேபோல, ஊர்காவல் படையைச் சேர்ந்த 132 பேர் என மொத்தமாக 865 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன், முன்னாள் ராணுவத்தினரும் தேர்தல் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கான பயிற்சிகள் இங்குஅளிக்கப்படவுள்ளன. அதன்படி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் தங்களது வாக்குகளை படிவம் 12 மூலம் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வாக்கு எண்ணும் நாளான மே 2-ம் தேதி காலை 8 மணிக்குள் கிடைக்கும் வகை யில் அனுப்பப்படும் அனைத்து தபால் வாக்குகளும் ஏற்றுக்கொள்ளப்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், துணை காவல் கண்காணிப்பாளர்கள் தங்கவேல் (திருப்பத்தூர்), சச்சிதானந்தம் (ஆம்பூர்), உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்