வேலங்குடி சாம்பிராணி கருப்பர் கோயில் திருவிழா : குதிரை பூதத்துக்கு பக்தர்கள் நேர்த்திக் கடன்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே வேலங்குடி கருப்பர் கோயிலில் பங்குனித் திருவிழாவில் 30 அடி உயர குதிரை பூதத்துக்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

வேலங்குடியில் சாம்பிராணி வாசகர் உறங்காப்புளி கருப்பர் கோயில் உள்ளது. இக்கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 8-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மகா சிவராத்திரி, பாரி வேட்டை வழிபாடு நடந்தன.

நேற்று கருப்பர் கோயில் அருகேயுள்ள அங்காளம்மன் கோயிலில் உற்சவ அம்மன் பச்சை வாழைக்குடிலில் எழுந்தருளல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் 30 அடி உயர குதிரை சிலை பூதத்துக்கு நேர்த்திக் கடனாக மாலை அணிவித்தனர். பக்தர்கள் பச்சை வாழை பரப்பியும், கரும்புத் தொட்டில், கோயில் மணி கட்டியும் நேர்த்திக் கடனை செலுத்தினர். நாளை (மார்ச் 18) மஞ்சள் நீராடல் நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்