பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது:

தமிழகத்தையொட்டிய மாநிலங்களிலும், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும் சமீபகாலமாக கரோனா பரவல் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதும், சமூக இடைவெளியைப் பின் பற்றாததும், முகக் கவசம் அணி யாததுமே கரோனா பரவலுக்குக் காரணமாக உள்ளது.

இதனால் வழிகாட்டுதலை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரம், வருவாய், உள்ளாட்சித்துறை அதிகாரி களுக்கும், போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தால் ரூ.200-ம், எச்சில் துப்பினால் ரூ.500-ம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் ரூ.500-ம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழிகாட்டுதலை மீறினால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்படும். விதிமீறும் நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயி ரம் அபராதம் விதிக்கப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக இதுவரை ரூ.4.41 லட்சம் அபராதம் வசூ லிக்கப்பட்டுள்ளது, என்று கூறி னார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்