ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம் :

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் பித்தளைப்பட்டி பிரிவில் நடை பெற்றது.

கூட்டத்துக்கு திண்டுக்கல் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் நத்தம் ஆர்.விசுவநாதன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் கோபால், சமூகநீதிப் பேரவை மாநிலச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாமக வேட்பாளர் திலகபாமாவை அறிமுகப்படுத்திப் பேசினர். கூட்டத்தில் அதிமுக, பாமக, பாரதிய ஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்