திருப்பத்தூரில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காத ஜவுளிக்கடை உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க வணிகநிறுவனங்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும், வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்றவேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரத்தில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமை யிலான நகராட்சி ஊழியர்கள் நேற்று திருப்பத்தூரில் பஜார் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்
அப்போது, திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில்பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமலும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள் ளாமலும், கிருமி நாசினி வழங்காமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து, அந்த ஜவுளிக் கடை உரிமையாளருக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக நோட்டீஸ் வழங்கினார். மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகளை வியாபாரிகள் முறை யாக கடைபிடிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago