மரக்காணம் அருகே - ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன :

By செய்திப்பிரிவு

மரக்காணம் அருகே கடல் ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.

மரக்காணம் அருகே அழகன் குப்பம் முதல் அனிச்சங்குப்பம் வரையில் சுமார் 40 கிலோ மீட்டர்தூரத்திற்கு கடற்கரை உள்ளது.இக்கடற்கரையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம்வரையில் கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலமாகும். இம்மாதங்களில் ஆழ்கடலில் உள்ள ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக தரைப்பகுதிக்கு வருகின்றன. இந்த அரிய வகை ஆமைகளை பாதுகாக்க அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மரக்காணம் அருகே வசவன்குப்பம் பகுதியில் வனத்துறையின் சார்பில் ஆமை பாதுகாப்பு குடில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இது வரையில்3,368 முட்டைகளை வனத்துறையினர் எடுத்து ஆமைகள் பாதுகாப்பு குடிலில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பாதுகாத்து வருகின்றனர்.

இதில், நேற்று 224 முட்டை களில் இருந்து ஆமை குஞ்சுகள்பொறிக்கப்பட்டது.

ஆமை குஞ்சுகளை விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின்பேரில் திண்டி வனம் வனச்சரகர் பெருமாள், வனவர் பாலசுந்தரம் மற்றும் வனத்துறையினர் வசவன்குப்பம் கடற் கரையில் விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்