பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்கலைக் கண்டித்து, தஞ்சாவூர், திருச்சி, கரூரில் நேற்று வங்கி ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, வங்கித் துறையில் செயல் பட்டுக் கொண்டிருக்கும், 5 ஊழியர்களுக்கான சங்கங்கள் மற்றும் 4 அதிகாரிகளுக்கான சங்கங்கள் இணைந்து நடத்தும் அகில இந்திய அளவிலான 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, தஞ்சாவூர் ஸ்டேட் வங்கியின் முன்பு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு, தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலை வர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன், வங்கி ஊழியர் சம்மேளனச் செய லாளர் சொக்கலிங்கம், அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி குருநாதன், அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மோகனசுந்தரம், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்சி ஸ்டேட் வங்கி பிரதான கிளை முன்பு, வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜி.ராமராஜ் தலைமை வகித்தார்.
இதேபோல, அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில், கனரா வங்கி மண்டல அலுவலகம் முன்பு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜி.வி.மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் ரங்கன் தலைமையில், கரூர் ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஐ.வெங்கடேசன், தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டத் தில் 120-க்கும் மேற்பட்ட கிளைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 53 வங்கிக் கிளைகளில் பணி புரியும் 350 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இத னால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளான காசோலை மூலம் பணப் பரிமாற்றம், வங்கி வரைவோலை வழங்குதல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago