தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் - அதிமுக, திமுக வேட்பாளர்கள் உட்பட 42 பேர் வேட்புமனு தாக்கல் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் உட்பட 2 பேர், கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன், பாபநாசம் தொகுதியில் அமமுக வேட்பாளர் எம்.ரங்கசாமி, திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன், அமமுக வேட்பாளர் வேலு.கார்த்திகேயன், பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசன், தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.அறிவுடைநம்பி உட்பட 3 பேர், ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.ராமச்சந்திரன் உட்பட 2 பேர், பட்டுக்கோட்டை தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்டிஎஸ்.செல்வம் என தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பேராவூரணி தொகுதியில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், திமுக வேட்பாளர் பூண்டி கே.கலை வாணன் உட்பட 3 பேர், நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், திமுக வேட்பாளர் எஸ்.ஜோதிராமன் உட்பட 4 பேர், மன்னார்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கம், திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா, அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் உட்பட 5 பேர், திருத் துறைப்பூண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.எஸ்.சுரேஷ்குமார் உட்பட 2 பேர் என திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 14 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாகை, மயிலாடுதுறையில்...

சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ பாரதி உட்பட 3 பேர், மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 2 பேர், பூம்புகார் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ பவுன்ராஜ், திமுக வேட்பாளர் நிவேதா முருகன் உட்பட 4 பேர், நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவன் உட்பட 4 பேர், வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் என நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று மொத் தம் 15 பேர் வேட்புமனு தாக் கல் செய்தனர். கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்