தி.மலை மாவட்டத்தில் 2-வது நாளில் - 31 பேர் வேட்பு மனுத்தாக்கல் :

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று 31 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 12-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

முதல் நாளில், திருவண்ணா மலையில் 2 சுயேட்சைகள் மற்றும் போளூர், ஆரணியில் தலா ஒரு சுயேட்சை என மொத்தம் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, 2-வது நாளாக நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் செங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் நைனாக்கண்ணு, திமுக சார்பில் கிரி, நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா உட்பட 5 பேரும், திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் எ.வ.வேலு, மாற்று வேட்பாளராக குமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கமலக்கண்ணன், மாற்று வேட்பாளராக ஜமீல் ஆகிய 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் பிச்சாண்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ்பாபு, பிரபு உட்பட 5 பேரும், கலசப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் சரவணன், அதிமுக சார்பில் பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபு உட்பட 7 பேரும், போளூர் தொகுதியில் திமுக சார்பில் சேகரன், அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் லாவண்யா உட்பட 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதேபோல், ஆரணி தொகுதியில் திமுக சார்பில் அன்பழகன், அதிமுக சார்பில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரகலதா உட்பட 5 பேரும், செய்யாறு தொகுதியில் திமுக சார்பில் ஜோதி மற்றும் அதிமுக சார்பில் தூசி கே.மோகன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வந்தவாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. தி.மலை மாவட்டத்தில்உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்