தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்படும் தொகையை விடுவிக்க குழு அமைப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்படும் தொகைகளை விடுவிக்க, கைப்பற்றுகை விடுவிப்பு மேல்முறையீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பான பணிகளை மேற்கொள்ள, தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும்படை குழுக்கள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில், தேர்தல் செலவினக் குழுக்கள் இயங்குகின்றன. இக்குழுவினரால் கைப்பற்றப்படும் தொகையை, கைப்பற்றுகை விடுவிப்பு மேல்முறையீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ் - 7373704212, உறுப்பினராக மாவட்ட கருவூல அலுவலர் ஆர்.ரகோத்தமன் - 8825781452, உறுப்பினர் மற்றும் செயலாளராக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) எம்.ஜெயபாலன் - 9994866264 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்தக் குழுவினரிடம் கைப்பற்றப்பட்ட தொகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தொகைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்