நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் தோட்ட நிறுவன உரிமையாளர்களுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
ஏப்ரல், 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் அனைத்து தோட்ட நிறுவன உரிமையாளர்களும், தங்களது தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும். தோட்ட நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிக்கும், வாக்களிக்கும் இடத்துக்கும் அதிக தூரம் இருந்தால் தொழிலாளர்கள் வாக்களிக்கத் தேவையான வாகன வசதியை, அந்தந்த தோட்ட நிறுவன உரிமையாளர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். இதுகுறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் 1800 425 0034 என்ற எண்ணில் தொழிலாளர்கள் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago