பொன்மலை ரயில்வே பணிமனையில் - பெண்களின் சக்தியை நினைவுகூரும் விழா : பெண் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்

By செய்திப்பிரிவு

திருச்சி பொன்மலை பணிமனையில் கரோனா பரவல் அபாயம் சூழ்ந்திருந்த காலத்திலும், இங்குள்ள பெண்களின் கணிசமான பங்களிப்புடன் 500 புதிய வேகன்களுக்கான கட்டுமான பணிகளை நிறைவேற்றினர்.

இந்த சூழலில் உலக மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக பிஎல்சிஎஸ் இரண்டடுக்கு கன்டெய்னர் வேகன்களின் முதல் தொகுப்பு நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் அதுதொடர்பான நிகழ்ச்சி பெண் சக்தியை நினைவுகூரும் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பணிமனையின் உதவி நிதி ஆலோசகர் தேவி, உதவி தணிக்கை அலுவலர் ஐஸ்வர்யா, இப்பணிமனைவியின் முதல் பெண் ஐஎஸ்ஓ 9606 வெல்டராக தகுதி பெற்ற சுமதி, மூத்த பிட்டர்கள் புவனேஸ்வரி, கே.ரெங்கமணி, திட்ட பொறியாளர்கள் ராதிகா, ஒப்பந்த பொறுப்பாளர் கவுதமி, கொள்முதல் பிரிவு அலுவலர் வனஜா, மனிதவள நிபுணர் ஷீலா, ரயில்வே பாதுகாப்பு படை தலைமை மகளிர் காவலர் சுதா உள்ளிட்ட பெண் அலுவலர்கள், பணியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் திருச்சி ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்த லோகோ ஓட்டுநர்கள் ஜான்சிராணி, நந்தினி, லோகோ ஆய்வாளர் பி.நாராயணவடிவு, கார்டு நீலாதேவி உள்ளிட்டோர் புதிதாக தயாரிக்கப்பட்டிருந்த 500-வது வேகனை அனுப்பி வைத்தனர். இதில் பங்கேற்ற அனைத்து பெண் சிறப்பு விருந்தினர்களுக்கும் முதன்மை பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண் சிறப்பு விருந்தினர்களுக்கும் முதன்மை பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்