புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி வட்டம் காரையூர் அருகே இடையாத்தூரில் பொன்மாசி லிங்கம் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டைபொன்னமராவதி வட்டாட்சியர் ஜயபாரதி தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங் களைச் சேர்ந்த 810 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளை களை அடக்குவதற்கு 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
மாடுகள் முட்டியதில் 14 பேர் காயம் அடைந்தனர். அதில், மண்டையூர் ப.சரவணக் குமார்(21), குடுமியான்மலை ரவி(25) ஆகி யோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இலுப்பூர் டிஎஸ்பி அருள்மொழி தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago