அன்பில் மாரியம்மன் கோயில் திருவிழா தேதி மாற்றம் :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் அன்பில் மாரியம்மன் கோயிலில் நடைபெறவிருந்த பூச்சொரிதல் மற்றும் தேர் திருவிழா ஆகியவற்றின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: லால்குடி அருகே உள்ள கீழ அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 3 வருவாய் கிராமங்களில் மார்ச் 10 முதல் 17-ம் தேதி வரை லால்குடி கோட் டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அன்பில் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் மார்ச் 14-ம் தேதி(இன்று) நடைபெறவிருந்த பூச்சொரிதல் திருவிழா மார்ச் 21-ம் தேதிக்கும், ஏப்.6-ம் தேதி நடைபெறவிருந்த தேர் திருவிழா ஏப்.13-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்