திருப்பத்தூர் மாவட்டத்துக்கு - தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தல் செலவுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் வரப்பெற்றுள்ளனர். அவர்களிடம், தேர்தல் செலவினம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க தேர்தல் செலவின பார்வையாளர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்துள்ள நிலையில், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக பிரவீன்குமாரும், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளராக விஜய் பஹதுர் வர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மேற்கண்ட அலுவலர்களிடம் தேர்தல் செலவினம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். வாணியம்பாடி தொகுதிக்கு 63743 83028, ஆம்பூர் தொகுதிக்கு 63743 40816 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம். செலவின பார்வையாளர் பிரவீன்குமாருக்கான தொடர்பு அலுவலராக நாட்றாம்பள்ளி வட்டார உதவி பொறியாளர் மூர்த்தி97894 06274 நியமிக்கப் பட்டுள்ளார்.

ஜோலார்பேட்டை தொகுதி தொடர்பாக 63814 47736 மற்றும் திருப்பத்தூர் தொகுதி தொடர்பாக 90427 97003 ஆகிய எண்ணுக்கு தேர்தல் செலவின பார்வையாளரிடம் புகார் தெரிவிக்கலாம். மேற்கண்ட தொகுதிகளின் பார்வையாளரான விஜய் பஹதுர் வர்மாவின் தொடர்பு அலுவலராக ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் கார்த்திகேயன் 94420 91399 நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்