செல்லூர் கே.ராஜுவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட - மதுரை மேற்கில் சின்னம்மாளுக்கு ‘சீட்’கிடைத்தது எப்படி? :

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மேற்குத் தொகுதியில் யாரும்எதிர்பார்க்காத நிலையில் திமுகவில்சி.சின்னம்மாளுக்கு ‘சீட்’ கிடைத்ததுஎப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மேற்கில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து திமுகவில் பலமான வேட்பாளர் யாராவது நிறுத்தப்படுவார்கள் என்று அக்கட்சியினர் பெரிதும் எதிர்பார்த் தனர். அதனால், இந்தமுறை இத் தொகுதியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளப திக்குக்கூட ‘சீட்’ இல்லை எனக் கூறப்பட்டதால் செல்லூர் ராஜூவை எதிர்த்து யார் வேட்பாளர் என்றபரபரப்பும், எதிர் பார்ப்பும் திமுகவினரிடையே ஏற்பட் டது.

அதுபோல், அமைச்சர் ஆர்பி.உதயகுமாரை எதிர்க்கும் திமுக வேட்பாளர்யார் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினரிடையே ஏற்பட்டது.

தற்போது மதுரை மேற்கில் சி.சின் னம்மாளும், திருமங் கலத்தில் சேடபட்டி முத்தையா மகன் மணி மாறனும் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அமைச்சர்களை எதிர்த்து சாதாரண வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சின்னம்மாளுக்கு எப்படி மேற்குத் தொகுதியில் வாய்ப்புக் கிடைத்தது என்பது தெரியாமல் திமுகவினர் குழம்பிப்போய் உள்ளனர்.

இது குறித்து முக்கிய நிர்வா கிகள்சிலர் கூறியதாவது: மதுரை மேற்கு,மத்திய தொகு தியை உள்ளடக்கியமாநகர தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக கோ.தளபதி இருக்கிறார்.இவர் மேற்குத் தொகுதியில் செல்லூர்கே.ராஜூவை எதிர்த்து ஏற்கெனவே இரண்டு முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். முக்குலத்தோர் சமூகத்தினர் இத்தொகுதியில் அதி களவில்இருப்பதால் இம்முறை தளபதி இங்குபோட்டியிட ஆர்வம் காட்டவில்லை.இவரது மற்றொரு தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவதால் மதுரை வடக்கில் போட்டியிட ‘சீட்’ கேட்டார். ஆனால், மதுரை வடக்கு, தெற்கு தொகுதிகள் உள்ளடக்கிய மதுரை மாநகர வடக்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் இருக்கிறார்.

தெற்கு தொகுதியை கூட்ட ணியில் மதிமுகவுக்கு ஒதுக்கியதால் பொன்.முத்துராமலிங்கம் வடக்கு தொகுதியில் தானோ அல்லது தனது மகனோ போட்டியிட ‘சீட்’ கேட்டார். ஆனால், கட்சித் தலைமை பொன்.முத்துராம லிங்கத்தை மாநகர வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தபோதே சட்டப்பேரவைத் தேர்தலில் போட் டியிட ‘சீட்’எதிர்பார்க்கக்கூடாது என்ற நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

அதனால், தனது மாநகர மாவட் டத்துக்குட்பட்ட தொகுதியாக இருந் தும் வடக்கில் பொன்முத்துராமலிங் கத்துக்கு ‘சீட்’ கிடைக்கவில்லை.

கோ.தளபதி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தும், அவருக்கு வடக்கில் போட்டியிட கட்சித் தலைமை ‘சீட்’ வழங்கியது. அதனால், இத் தொகுதியில் ‘சீட்’ கேட்ட முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி உட்பட 20-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றமடைந்தனர். அவர்களையும், இந்தத் தொகுதியின் மாநகர மாவட்டச் செயலாளர் பொன்.முத்துராமலிங்கத்தையும் அனுசரித்துச் சென்று தேர்தல் பணியாற்ற கோ.தளபதி முடிவு செய் துள்ளார்.

தளபதி வடக்குக்கு மாறியதால் மதுரை மேற்கில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து யாரைப் போட்டியிட வைக்கலாம் என்று கட்சித் தலைமை யோசித்தபோது சி.சின் னம்மாளுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அந்தத் தொகுதியில் ‘சீட்’ கேட்டி ருந்த ஜெயராமன், எஸ்.பாலமுருகன், வழக்கறிஞர் இளமகிழன் ஆகியோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய தொகுதி எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன், முன்னாள் மாநகரப் பொறுப்பாளர் வேலுச்சாமி, கோ.தள பதி ஆகியோரின் ஆதரவும், பெண் ஒருவருக்கு ‘சீட்’ வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலும் கட்சித் தலைமை சின்னம்மாளுக்கு ‘சீட்’ வழங்கியுள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்