கடந்த 50 ஆண்டுகள் அரசியலில் - திமுக பொது செயலாளர் துரைமுருகன் சந்திக்கும் 12-வது தேர்தல் :

By செய்திப்பிரிவு

திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் கடந்த 50 ஆண்டுகளில் 2 தோல்வி, 9 வெற்றியுடன் 12-வது சட்டப்பேரவைத் தேர்தலை காட்பாடி தொகுதியில் சந்திக்க உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளி யான நிலையில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. எதிர்பார்த்தபடியே காட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட உள்ளார்.

கடந்த 1971-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் அவருக்கு இது 12-வது சட்டப்பேரவைத் தேர்தல் ஆகும். கடந்த50 ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் 2 தோல்வி, 9 வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். காட்பாடி தொகுதியில் மட்டும் 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு பதவிகளை கடந்தவர்

திமுகவில் மாவட்ட பிரதிநிதி பதவியில் தொடங்கி, திமுக துணை பொது செயலாளர், தலைமை கழக முதன்மை செயலாளர், பொருளாளர், தற்போது திமுகவின் பொதுச் செயலாளர் என பல்வேறு பதவிகளை கடந்து வந்தவர் காட்பாடி தொகுதியில் மட்டும் 10-வது முறையாக போட்டியிட உள்ளார். காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரை முருகனை எதிர்த்து, அதிமுக சார்பில் கிழக்கு முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமு போட்டியிடவுள்ளார்.

காட்பாடி பகுதி திமுக நிர் வாகிகள் கூறும்போது, ‘‘திமுகவில் தலைவருக்கு அடுத்த இடத்தில் பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு இந்த முறை காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தேர் தலில் அவரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம். வரும் திங்கள்கிழமை முதல் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்