வேலூர் மற்றும் கே.வி.குப்பம் (தனி)தொகுதியில் மட்டும் தலா ஒரு சுயேட்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் மீது வரும் 20-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வரும் 22-ம் தேதி மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத் தில் உள்ள 4 தொகுதிகள் என மொத்தம் 9 தொகுதிகளுக்கான மனுத்தாக்கல் நேற்று காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடிந்தது. முதல் நாள் என்பதால் பெரும்பாலானவர்கள் விருப்ப மனுக்களை மட்டுமே வாங்கிச் சென்றனர்.
வேலூர் மற்றும் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் மட்டும் தலா ஒரு சுயேட்சை வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. வரும் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை அன்று மனுத்தாக்கல் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது. கரோனா பரவலை தடுக்க மனுத்தாக்கலின் போது வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டும் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago