வேலூரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 150 வியாபாரிகளுக்கு முதற்கட்ட கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் இருந்த நேரத்தில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தொற்று அதிகளவில் பரவத் தொடங்கியது. ஒரே வாரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதை யடுத்து, நேதாஜி மார்க்கெட் மூடப்பட்டு அங்குள்ள 750-க்கும் மேற்பட்ட கடைகள் நகரின் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. பின்னர், படிப்படியான தளர்வுகளுடன் கடந்த 5 மாதங் களுக்கு முன்பு மார்க்கெட் முழு வீச்சில் செயல்பட ஆரம்பித்தது.
இந்நிலையில், மார்க்கெட் பகுதியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதற்கான சிறப்பு முகாம் கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள சண்முகனடியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் நேதாஜி மார்க்கெட், மண்டி தெரு, சுண்ணாம்புக்கார தெரு, லாங்கு பஜார், மெயின் பஜார் கடை உரிமையாளர் மற்றும் வியாபாரிகளுக்கு முதற்கட்ட கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
வேலூர் வணிகர் சங்கத் தலைவர் ஞானவேலுவுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. முகாமில் மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இந்த முகாமில் 150 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப் பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago