போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு நீர் மோர் வழங்கும் திட்டத்தை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீஸார் 54 பேர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடும்போது பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு நீர் மோர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீஸாருக்கு நீர் மோர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. போக்குவரத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, போக்குவரத்து போலீஸாருக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது நாள்தோறும் காவலர்களுக்கு நீர் மோர் வழங்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago