தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணி அமைப்பின் தலைவர் பி.தினகரன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மலை மாவட்டம் என்பதால் நீலகிரியில் தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, அவரவர் பணியாற்றும் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளிலேயே பணி வழங்க வேண்டும்.
சுமார் 50 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டருக்குமேல், போக்குவரத்து வசதி குறைந்த கிராமங்களில் தேர்தல் பணிக்குச் செல்லும் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சிரமம் ஏற்படுகிறது. எனவே, மண்டல அலுவர்கள் மூலமாக போக்குவரத்து வசதிகளை செய்துதர வேண்டும். அதேபோல, உணவு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேர்தல் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடும் நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago