சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி உதகையில் தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த, ஐந்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள் ஜெ.இன்னசென்ட் திவ்யா (உதகை), ஆதில்லா அப்துல்லா (வயநாடு), கோபால கிருஷ்ணன் (மலப்புரம்), கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் துணை ஆணையர் எம்.ஆர்.ரவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆர்.பாண்டியராஜன் (நீலகிரி), சுஜிஸ்தாஸ் (மலப்புரம்), அரவிந்த சுகுமார் (வயநாடு), ஆனந்தகுமார் (சாம்ராஜ் நகர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில எல்லையோரச் சோதனைச்சாவடிகளான, நாடு காணி, தாளூர், கக்கநல்லா, பாட்டவயல், பர்லியாறு, குஞ்சப்பனை, நம்பியார் குன்னு, மதுவந்தாள், சோலாடி, கக்குண்டி, மணல் வயல்,கோட்டூர், ஓவேலி, மானார் உள்ளிட்ட 18 சோதனைச் சாவடிக ளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மேலும், பணம், பரிசுப் பொருட்கள் பரிமாற்றம், மதுபாட்டில் கடத்தலை தடுப்பது, பாதுகாப்பு,அதிக எண்ணிக்கையில் பொருட்களை வாங்குவோர் குறித்த விவரங்களையும், சந்தேகத்துக்கிடமான வகையில் எல்லைகளைக் கடந்து செல்வோர் குறித்த விவரங்களையும் உடனுக்குடன் பரிமாறுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கேரள மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கண்காணித்தல், கரோனா பரவல் தடுப்புக்காக மாநில எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago