பின்னலாடைத் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்றியதால்தான், திருப்பூர் பின்னலாடைத் தொழில் குறிப்பிடத்தக்க உயர்வை அடைந்தது. சமீப காலமாக நூற்பாலைகள் நூல் விலையை மாதத்துக்கு ஒரு முறையும், சில நேரங்களில் இடையிலும் உயர்த்தி வருகின்றன. இதனால், பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் என்ன செய்வதென அறியாமல் இருக்கும் நிலையில் உள்ளனர்.
பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டு தற்போது பாதிப்புக்குள்ளான அனைத்து தொழில் நிறுவன சங்கங்களும் ஒன்று கூடி நூற்பாலை சங்கத்தினரையும், நூற்பாலைகளையும் ஒருமுறை விலை நிர்ணயித்தால் 3 மாதத்துக்கு எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என கேட்டுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடு பின்னலாடைத் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் ஆரோக்கியமாக வளர மிக உதவியாக இருக்கும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago