நூலின் முதல் பிரதியை மக்கள் மாமன்றத்தின் அமைப்பு தலைவர் சி.சுப்ரமணியன் பெற்றுக்கொண்டார். வழக்கறிஞர் ரவி வரவேற்றார். மாமன்றத்தின் செயல் தலைவர் ராஜா, எழுத்தாளர்கள் ஆனந்தகுமார், வின்சென்ட் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினரான திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சு.குணசேகரன் பேசும்போது, "நம் பாடத் திட்டத்திலும், வாழ்வியலிலும் உள்ள நீதி கதைகள், இன்றைய கால கட்டத்தில் எங்கே போயின? இன்று ரோபோக்களின் காலமாகிவிட்டது. குழந்தைகள் அலைபேசிகளுக்குள் அடைக்கலமாகிறார்கள். கல்வி மன அழுத்தங்களைத் தருகிறது. புத்தகங்கள் என்றைக்கும் நண்பனாக இருக்கும். புத்தகங்கள் மனிதநேயத்தை வளர்க்கும், பொது அறிவை வளர்க்கும், புத்தகங்களால் சமூக மாற்றம் நிகழும். இன்றைக்கு வாசிப்பு குறைந்து வருவது வருத்தம் தருகிறது. நீதி கதைகள் தந்த மறுமலச்சியை நினைத்து, புத்தக வாசிப்பை குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் வளர்ப்பது இன்றைய முக்கியமான கடமை" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago