திருவாரூரில் உள்ள நீச்சல் குளத்தில் மார்ச் 8-ம் தேதி முதல் நீச்சல் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்தெரிவித்துள்ளது:
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சிக்கு மார்ச் 8-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுகிறது. 10 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட பொதுமக்கள் நாள்தோறும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும்.
நீச்சல் குளத்தில் 20 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளியுடன் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
நீச்சல் குளம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும். நீச்சல் பயிற்சிக்கு ஒரு நபருக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ.59 கட்டணமாக வசூலிக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04366-290620 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago