தேர்தல் பணிகளை வீடியோ எடுக்க அனுமதி தராவிட்டால் குடும்பத்துடன் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வீடியோகிராபர்கள் முற்றுகையிட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடியோகிராபர்கள் உள்ளனர். கடந்த கால தேர்தல்களில் தேர்தல் பணிகளை வீடியோ எடுக்க உள்ளூர் வீடியோகிராபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை வீடியோ எடுக்க மாநிலம் முழுவதும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வீடியோகிராபர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பணியை வீடியோ எடுக்க கார்ப்பரேட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் முறைகேடு தான் நடக்கும். உள்ளூர் வீடியோகிராபர்களுக்கு வழங்காவிட்டால் குடும்பத்தோடு தேர்தல் புறக்கணிக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago