திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார் . வாக்குச்சாவடிகளில் காற்றோட்ட வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்தார்.
மேலும், சாய்வுதளம் மற்றும் கழிப்பறை பழுதடைந்துள்ள இடங்களில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், போதுமான வெளிச்சம் இல்லாத இடங்களில் கூடுதல் மின்விளக்கு அமைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். திருச்செங்கோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ப.மணிராஜ், நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago