நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து நகைக்கடை, ஜவுளிக் கடை உள்ளிட்ட வணிக நிறுவன உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தலைமை வகித்துப் பேசியதாவது:
சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் கரை பதித்த வேட்டி, துண்டு, மப்ளர் மற்றும் வெள்ளி, தங்க அணிகலன்கள் என அதிகளவில் கொள்முதல் செய்யக் கூறினால் அதன் முழு விவரமும் தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட நபர்கள் ஆர்டர் கொடுத்தாலும் அதனை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவான நிலையில் மேற்கண்ட பொருட்களை விற்க வியாபார தந்திரங்களை மேற்கொள்ளக் கூடாது. தங்களது நிறுவனங்கள் கொள்முதல் தொடர்பாக அதிக அளவிலான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் விதிகள் மீறப்பட்டால் புகார் செய்யலாம். இதன்படி ராசிபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வீ.சக்திவேலு - 94450 00232, சேந்தமங்கலம் வே.ரமேஷ் - 97914 56668, நாமக்கல் மு.கோட்டைக்குமார் - 94450 00431, பரமத்தி வேலூர் மோகனசுந்தரம் - 9842660218, திருச்செங்கோடு ப.மணிராஜ் 94450 00432, குமாரபாளையம் மு.மரகதவள்ளி - 9487257199 உள்ளிட்ட அலுவலர்களை குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு பிரிவு) எஸ்.ராமு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago