சிறுவலூர் பச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் திருவிழா :

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த சிறுவலூர் பச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 1-ம் தேதி சந்தனக்காப்பு அலங்காரமும், அடுத்த நாள் கிராமசாந்தியும் நடந்தது. நேற்று முன் தினம் காப்புக்கட்டுதல், பட்டத்தரசி அம்மன் பொங்கல் வைத்தல், குண்டம் திறப்பு மற்றும் தீ மூட்டுதல் நிகழ்வுகள் நடந்தன.

நேற்று அதிகாலை அம்மன் அழைத்தல், வாக்குக் கேட்டல் நிகழ்வுகளைத் தொடர்ந்து திருக்கொடி ஏற்றப்பட்டு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து தலைமை பூசாரி சக்திவேல் முதலில் குண்டம் இறங்கினார். பின்னர் காப்புக் கட்டி விரதம் இருந்த பூசாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு சிறுமி கையில் வேப்பிலையுடன் குண்டம் இறங்கினார். பெண் பக்தர்கள் கையில் குழந்தைகளுடன் குண்டம் இறங்கி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பச்சைநாயகியம்மனை வழிபட்டனர்.

குண்டம் திருவிழாவில் இன்று (5-ம் தேதி) அபிஷேக பூஜை மற்றும் தேர் வீதி உலாவும், 7-ம் தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் கருப்பராயன் பொங்கல் வைத்தல் நிகழ்வுடன் திருவிழா முடிவடைகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்