திருவாரூர் மாவட்டத்தில் ஆன் லைன் பண பரிவர்த்தனையை கண்காணிக்க தனிக் குழு அமைக் கப்பட்டுள்ளது என ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலர் வே.சாந்தா தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள அலுவலர்களுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியது:
திருவாரூர் மாவட்டம் முழு வதும் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 11 ஆயிரம் தேர்தல் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 2 அரசு மருத்துவமனைகள், 10 ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 5 தனியார் மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 நாட்கள் ஆட்சியர் அலுவல கத்திலும் முகாம் நடத்தப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக 6 புகார்கள் வந்துள்ளன. அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும், ஆன்லைன் பண பரிவர்த்தனை தொடர்பாக தனிக் குழு அமைக்கப்பட்டு, வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்வோரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு, அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
சுய உதவிக் குழுக்களை பொறுத்தவரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அம லுக்கு வருவதற்கு முன் அறிவிக்கப்பட்ட கடன்களை வழங்குமாறும், மீண்டும் புதிய கடன் களை வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு நகை, பாத்திரம் போன்ற பொருட்கள் வாங்க பணம் எடுத்துச் செல்வோரின் நலனுக்காக, அவசர தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் மனு அளித்து உடனடித் தீர்வை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago