திருவாரூர் மாவட்டத்தில் - 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக்தில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக செய்தி மக்கள் தொடர்பு அலுவகத்தின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு செய்தி மலரை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வே.சாந்தா நேற்று வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார். மேலும், மகளிர் திட்டத்தின் சார்பில் வண்ணக்கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:

வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை என்பதை அனைவரும் அறிய வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் வாக்குகளை பரிசுப் பொருட்களுக்கும், ரொக்கத்துக்கு விற்காமல், வாக்களிப்பது நமது உரிமை என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இம்முறை அதிக இடவசதி உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு தினத்தன்று மக்கள் வாக்குப்பதிவு மையத்துக்குச் சென்று, வாக்களித்து ஜனநாயகத்தை தழைக்கச் செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்