பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை:
திண்டுக்கல் மாவட்டம், அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் எம்பில், பிஎச்டி போன்ற உயர்கல்வி பயில்வதற்கு முறையாக விண்ணப்பித்தும் இதுவரை உரிய அனுமதி வழங்கப்படவில்லை.
அத்தகைய ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து வழிகாட்டுதல் வழங்க திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கடிதம் அனுப்பினார். அதை பரிசீலனை செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு சில அறிவுறுத்தல்கள் தற்போது வழங்கப்படுகிறது. அதன்படி 2018-ம் ஆண்டு மே 18-ம்தேதி அரசாணை 101 வெளியிடப்பட்ட பின்பு இந்த இயக்குநரகத்துக்கு வந்த கோப்புகளில்அனுமதி வழங்காமல் நிலுவையில் இருந்தவை அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்விஅலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. அதேநேரம் உயர்கல்வி பயில்வதற்கான அனுமதி கோரி பெறப்பட்ட கோப்புகள் தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி இதுவரை ஆணை ஏதும் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago