பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

By செய்திப்பிரிவு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக, பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயரவில்லை. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து 14 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

அதேபோல, கடந்த 23-ம் தேதி மீண்டும் உயர்ந்தது. பின்னர் தொடர்ந்து 3 நாட்களுக்கு விலை உயராமல், அதே விலைக்கு விற்பனை ஆனது. 27-ம் தேதி மீண்டும் விலை அதிகரித்தது. நேற்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் விலை அதிகபட்சமாக மும்பையில் ரூ.97.57, ஹைதராபாத்தில் ரூ.94.79, பெங்களூரூவில் ரூ.94.29, டெல்லியில் ரூ.91.17-க்கு விற்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்