சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘தேர்தல் கட்டுப்பாட்டு அறையை’ மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று திறந்து வைத்தார். பின்னர், தேர்தல் பணியாற்ற உள்ள அலுவ லர்களுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் பணிகளுக்கான ஆயத்தப்பணிகள் விறுவிறுப்படைந் துள்ளன. வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக் கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) என மொத்தம் 5 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது. இதனை, மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சண்முக சுந்தரம் நேற்று திறந்து வைத்து, அதில் பணியாற்றக்கூடிய அலுவலர் களுக்கு பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசும்போது, "தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அரசு அலுவலர் களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில்இருந்து வரும் புகார் மீது பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் தருபவர்களின் முக வரியை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. தேர்தல் தொடர்பான புகார்களை 180042-55668 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் வேலூர் மாவட்டத்தில் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள், மக்கள் குறை தீர்வுக் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம், மனு நீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மே 2-ம் தேதி வரை நடத்தப்படமாட்டாது.
தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங் குவதும், வாக்காளர்கள் பணம், பொருட்களை பெறுவதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 171பி-ன்படி தண்டடைக்குரிய குற்றச் செயலாகும். தமிழக சட்டப் பேரவை தேர்தலை அமைதியான முறையில் நடத்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) புருஷோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago