ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 269 துணை ராணுவ வீரர்கள் வருகை

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப்பணியில் ஈடுபட 269 துணை ராணுவ வீரர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு நேற்று வந்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பாதுகாப்புப்பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகின்றன. தேர் தல் பாதுகாப்பு பணிக்கு உள்ளூர் காவல் துறையினருடன் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினர் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகின்ற னர். அதன்படி, சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் துணை ராணுவத்தினர் மாவட்ட வாரி யாக பிரித்து அனுப்பப்பட்டு வரு கின்றனர்.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு முதற் கட்டமாக 269 துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்புப்பணிக்காக நேற்று வந்தனர். இதில், வேலூர் மாவட்டத்துக்கு 89 துணை ராணுவ வீரர்கள் நேற்று வந்தனர். அவர்கள், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், மாவட்ட எல்லைப் பகுதிகளான கிறிஸ்ட்டியான் பேட்டை, பரதராமி, பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் உள்ளூர் காவல் துறையினருடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங் களில் பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை உள்ளூர் காவல் துறை யினர், நிலை கண்காணிப்பு குழுவினருடன் இணைந்து துணை ராணுவ வீரர்கள் சோதனை செய்ய வுள்ளனர்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 96 துணை ராணுவ வீரர்கள் நேற்று வந்தனர். அவர்கள், வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் அணிவகுப்பு ஒத்திகையை துணை ராணுவத்தினர் இன்று (1-ம் தேதி) நடத்தவுள்ளனர்.

இதையடுத்து, 2 நாட்களில் மாவட்ட எல்லைகளில் அமைந் துள்ள சோதனைச் சாவடிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.

மேலும், ராணிப்பேட்டை மாவட் டத்துக்கும் 84 துணை ராணுவ வீரர்கள் நேற்று வந்தடைந்தனர். அவர்கள், ஆற்காட்டில் உள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். ஓரிரு நாளில் சோதனைச்சாவடிகளில் உள்ளூர் காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு 269 துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப்பணிக்காக வந்துள்ளனர்.

இதற்கிடையே, வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ளூர் காவல் துறையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களை சோதனை செய்த பிறகே மாவட்ட எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்