அமைச்சரின் அரசு வாகனம் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு, தமிழக அரசின் சார்பில்கார் வழங்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, அரசு வாகனங்களை ஒப்படைக்கும்படி ஆட்சியர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து உடுமலை யில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் கால்நடைத் துறைஅமைச்சருக்கு வழங்கப்பட்ட வாகனம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் அறிவுநிதி, அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்