தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி நடந்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் உள்ளிட்டோர் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசு அலுவலகங்களில் இருந்த அரசின் சாதனை விளம்பரங்கள், கல்வெட்டுகள் ஆகியவை மூடி மறைக்கப்பட்டன.
இதனிடையே, தேர்தல் அறிவிப்பு வெளியான நேற்று முன்தினம் காலை வரை சேலம் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில், அரசு விழா நடைபெற்றதால் ஏராளமான இடங்களில் அரசின் சாதனை விளம்பரம் மற்றும் அதிமுக விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன.
இதேபோல், திமுக சார்பில் பல பிரச்சார கூட்டங்கள் நடந்ததால் மாவட்டத்தில் அதிகளவு அரசியல் விளம்பரங்கள் இருந்தன. இவற்றை அகற்றுவது உள்ளாட்சித்துறை பணியாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago