வன்கொடுமை வழக்கு விசாரணையில் முரண்பாடு நீதிபதி, அரசு சிறப்பு வழக்கறிஞர், காவல் அதிகாரி நாளை ஆஜராக உத்தரவு

By செய்திப்பிரிவு

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் முரண்பாடு இருப்பதாக கூறியுள்ள உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிபதி, அரசு வழக்கறிஞர், காவல் துறை விசாரணை அதிகாரி ஆகியோர் நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2016-ம்ஆண்டு 4-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் அப்பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

போக்சோ சட்டப்பிரிவில் சிறை

இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம், ராஜாவை குற்றவாளி என அறிவித்து போக்சோ சட்டப்பிரிவில் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டத்தின் இரு பிரிவுகளில் 7 ஆண்டுகள் மற்றும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்த நீதிபதி, காவல் துறை விசாரணையிலும், நீதிமன்ற விசாரணையிலும் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

அதையடுத்து காவல் துறை விசாரணை அதிகாரி மலர்க்கொடி, அரசு சிறப்பு வழக்கறிஞர் வினோத்குமார், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி என்.விஜயகாந்த் ஆகியோர் நாளை (மார்ச் 1) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்த நீதிபதி, காவல் துறை விசாரணையிலும், நீதிமன்ற விசாரணையிலும் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்