காமராசர் பல்கலை.யில் பறவைகள் கணக்கெடுப்பு

By செய்திப்பிரிவு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. துணை வேந்தர் எம்.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பறவைகள் கணக்கெடுப்பினால் நமது பகுதியில் உள்ள பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றார்.

பல்கலைக்கழகத்தின் ஆற்றல் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் துறைத் தலைவர் பேராசிரியர் கண்ணன், அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் ஆகியோர் பேசினர்.

விவசாயத் துறையைச் சேர்ந்த 15 மாண வர்கள், ஆற்றல் மற்றும் சுற்றுப்புறத் துறை ஆராய்ச்சி மாணவர்கள், அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்