அழகர்கோவில் கள்ளழகர் கோயி லில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கஜேந்திர மோட்சத் திருவி ழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து தேவி, பூதேவி சமேத கள்ளழகர் எனும் சுந்தரராஜப் பெருமாள் பல்லக்கில் புறப்பட்டார்.
பின்னர் மண்டுக தீர்த்தம் எனும் பொய்கைக்கரைப்பட்டி புஷ்க ரணிக்கு காலை 10.30 மணிக்கு சென்றடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் கரையைச் சுற்றி தேவி, பூதேவியருடன் சுந்தரராஜப் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாலையில் சுவாமி கோயிலை சென்றடைந்தார்.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவம் பிப்.17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் 11-ம் நாளான நேற்று இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலைத் தெப்பத்தில் தேவி, பூதேவியருடன் வியூக சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago