தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மதுரை யாதவர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா.சேகர் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் மு.நாராயணன் வரவேற்றார். இதில், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் வெங்கடேசன், ஜலஜா மதன் ஆகியோர் ‘கதிர்வீச்சு பாதுகாப்பு’ எனும் தலைப்பில் பேசினர். அணுக்கரு உலையின் செயல்முறை மாதிரிகளின் கண்காட்சி நடைபெற்றது. பேராசிரியர் க.வேல் முருகன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago