மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப் புக்காக மத்திய படையின் ஒரு அணி மதுரை வந்துள்ளது. படிப்படியாக படை வீரர்கள் வருவார்கள் என ஆட்சியர் த.அன்பழகன் கூறினார்.
மதுரை மாவட்ட தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் த.அன்பழகன் நேற்று கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 3,856 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 992 பதற்றமானவை. ஆண்கள் 13,21,153 பேர், பெண்கள் 13,64,316 பேர், இதரர் 202 பேர் என மொத்தம் 26,85,671 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும் வரை வாக்காளராக சேர மனுக்களை அளிக்கலாம். 80 வயதுக்கும் மேற்பட்டோர் 40 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். இவர்கள் விரும்பினால் தபால் வாக்குப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
18,508 பேர் வாக்குச்சாவடிகளில் பணி யமர்த்தப்படுவர். சட்டப் பேரவை தொகுதி வாரியாக தலா 3 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலூர், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி, சோழ வந்தான், உசிலம்பட்டி தொகுதிகளுக்கு நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி, மதுரை வடக்கு, தெற்கு, மத்தி, மேற்கு தொகுதிகளுக்கு மதுரை மருத்துவக் கல்லூரி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக்கில் வாக்குகள் எண் ணப்படும். தேர்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்ற கட்சியினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 1950 என்ற போன் எண்ணிலும், சி விஜில் செயலி மூலமும் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago