கரூர் மாவட்டத்தில் 85 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 9 மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி தெரிவித்தார்.
கரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,032 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், 1,050-க்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்த 242 வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு, தற்போது 1,274 வாக்குச்சாவடிகளாக அதிக ரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 85 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 9 மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி களில் தலா 6 பறக்கும் படைக் குழுக்கள், 6 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 44 குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,274 வாக்குச்சாவடிகள் 113 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 121 மண்டல அலுவலர்கள், 6,116 வாக்குப்பதிவு அலுவலர்கள், 109 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 8 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
முன்னதாக, அதிகாரிகள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோ சனைக் கூட்டத்தில் ஆட்சியர் சு.மலர்விழி பங்கேற்று பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago