கூட்டுறவு வங்கியில் கடன் வழங்காததால் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுயஉதவிக் குழுவினர்

By செய்திப்பிரிவு

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அமைச்சர் வழங்கிய கடன் உத்தரவை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் நிராகரித்ததால், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மைத் துறை நல அலுவலகத்தை மகளிர் சுயஉதவிக் குழுவினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுபான்மை பிரிவு மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின் றன. இவற்றில் 7 சுயஉதவிக் குழுக்களுக்கு சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் சுழல்நிதி கடனுதவி வழங்குவதற்கான உத்தரவு அண்மையில் திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், அமைச்சர் மற்றும் ஆட்சியரால் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடன் வழங்குவதற்கான உத்தரவுடன், அன்னமங்கலம் கூட்டுறவு வங்கியை மகளிர் சுய உதவிக் குழுவினர் அணுகியபோது, அங்குள்ள அதிகாரிகள் கடன் வழங்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தியடைந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் நேற்று அன்னமங்கலம் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை அலுவ லகத்தை முற்றுகையிட்டு, முழக் கமிட்டனர்.

அவர்களுக்கு சுழல்நிதி கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, சுய உதவிக்குழு பெண்கள் கலைந்துசென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்