வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை திருச்சி மாவட்டத்தில் 3,292 ஆக அதிகரிப்பு ஆட்சியர் சு.சிவராசு தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான சு.சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏற்கெனவே 2,531 வாக்குச் சாவடிகள் இருந்தன. தற்போது, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ளவை பிரிக்கப்பட்டு, 3,292 வாக்குச் சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 96 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 81 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 23,32,886 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 80 வயதுக்கு மேற் பட்டவர்கள் 53,044 பேரும், மாற்றுத்திறனாளிகள் 19,265 பேரும் உள்ளனர். இவர்களில் விருப்பப்பட்டோருக்கு அஞ்சல் வாக்கு வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே உள்ள சோதனைச்சாவடிகள் தொடர்ந்து செயல்படும். இதுதவிர கண்காணிப்புக் குழுவினரும் தொடர் சோதனையில் ஈடுபடுவார்கள். தேர்தல் தொடர்பாக புகார்கள் வரும்போது உரிய நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்