ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அதிகாரிகளுக்கு அறிவுரை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக கண் காணிக்க வேண்டும் என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது.

ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா, ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பேபி இந்திரா, தேர்தல் பிரிவு வட்டாட் சியர் ஜெயக்குமார் மற்றும் பல் வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும் போது, ‘‘மக்கள் பிரதிநிதிகள் பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள் அரசு வசம் பெற வேண்டும். அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அரசு நலத்திட்டங்கள் தொடர் பான புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு பலகைகளை அகற்ற வேண்டும். தேர்தல் தொடர்பான பணியில் இருக்கும் எந்தவொரு அரசு அலுவலரையும் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியின்றி மாறுதல் செய்யக்கூடாது.

மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை அந்தந்த சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கண்காணித்தல் வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தங்கும் விடுதிகள் ஆட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும். ஆட்சியரின் முன் அனுமதியின்றி ஒருவரையும் தங்க அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்