வேலூர் வெங்கடேஸ்வரா பாலி டெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 183 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் புதுச்சேரி லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பில் மாணவிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி துணைத் தலைவர் ஜனார்த்தனன் தலை மையில் நடைபெற்ற முகாமை கல்லூரி தலைவர் ரமேஷ் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஞானசேகரன் வர வேற்றுப் பேசினார். டிவிஎஸ் லூகாஸ் நிறுவனத்தின் முதுநிலை மனிதவள மேம்பாட்டு அலுவலர் தினேஷ்குமார், நிறுவனம் குறித்தும், சலுகைகள் குறித்தும் விளக்கினார். முகாமில் பங்கேற்ற வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவி கள் 253 பேரில் 183 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
முகாமில், டிவிஎஸ் லூகாஸ் நிறுவன மேற்பார்வையாளர் விக் னேஷ், கல்லூரி வளாகத்தேர்வு அலுவலர் அருண்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago